Tuesday, 14 November 2017

கிராம நிர்வாக அலுவலர்களின் கடமைகள் மற்றும் பணிகள்



கிராம நிர்வாக அலுவலர்களின் கடமைகள் பணிகள் குறித்த கேள்வி பதில்கள்

பகுதி -1
1. மக்களின் நேரடித் தொடர்பிற்குட்பட்ட இன்றியமையாதத் துறையாக இயங்குவது எது ?
வருவாய் நிர்வாகத் துறை

2. வருவாய் நிர்வாகத் துறை யாரின் கீழ் இயங்குகிறது ?
சிறப்பு ஆணையர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர்

3. பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணித்தல் போன்ற பணிகள் யாரால் கவனிக்கப்படுகின்றன ?
வருவாய் நிர்வாகத் துறை

4. மாவட்ட அளவில் நிலம் சம்மந்தமான பணிகளைக் கவனிக்கும் முதன்மை அதிகாரி யார் ?
மாவட்ட ஆட்சியர்

5. முதியோர் உதவித்தொகை வழங்கும் துறை எது ?
வருவாய்த் துறை

6. வருவாய்த் துறை அதிகாரிகள் யாருடன் நேரடித் தொடர்பு கொண்டுள்ளனர் ?
மக்களிடம்

7. மாவட்ட நிர்வாகத்திற்கு முதுகெழும்பாக இருந்து வரும் அமைப்பு எது ?
கிராம நிர்வாக அமைப்பு

8. கிராம முன்சீப்கர்ணம் போன்ற பணியாளர்கள் எதற்கு முன் பணியாற்றினர் ?
14.11.1980 கிற்கு முன்

9. வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தணிக்கும் துறை என எப்பொழுது பெயர் மாற்றம் செய்யப்பட்டது ?
27.05.2003

10. அரசு ஆணை நிலை எண் எது ?
249

11. வருவாய் அதிகாரிகள் யாராகவும் இருந்து கிராமத்தின் பொது நிர்வாகத்தைக் கவனித்தனர் ?
கிராம பொது நிர்வாக அதிகாரிகளாக

12. கிராம நிர்வாக அமைப்பு எந்த ஆண்டு மாற்றம் செய்யப்பட்டது ?
1980

13. கிராம அலுவலர்கள் ஒழிப்பு அவரசச் சட்டம் என்று பிரகடனப் படுத்தப்பட்டது ?
13.11.1980

14. கிராம அலுவலர் ஒழிப்புச் சட்டம் எப்பொழுது நடைமுறைக்கு வந்தது ?
14.11.1980

15. கிராம நிர்வாக அலுவலர் பதவி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைக் குழுவின் கட்டுப்பாட்டில் எப்பொழுது வந்தது ?
12.12.1980

16. அதன் அரசு ஆணை என்ன ?
அரசு ஆணை எண் 2747

17. கிராம நிர்வாக அலுவலர்களின் தகுதியாக அரசு நிர்ணயம் செய்த தகுதி எது ?
எஸ்.எஸ்.எல் சி தேர்ச்சி

18. அதற்கான அரசு ஆணை என்ன ?
அரசு ஆணை எண் - 1287

19. எந்த ஆண்டில் பதவியில் இருந்தவர்களுக்கு இச்சலுகை வழங்கப்பட்டது ?
6.7.1988 -இல் ( 14.11.1980 அன்று பதவியிலிருந்தோர்)

20. அரசு ஆணை 954 இன் முக்கியத்துவம் என்ன ?
குறைந்த பட்ச தகுதி கொண்ட முன்னாள் கிராம அலுவலர்களுக்கான பணிச் சலுகை பற்றியது

21. கிராமத் தலையாரி மற்றும் வெட்டியான் போன்றோர் எப்பொழுது
நிரந்தரமாக்கப்பட்டனர் ?
6.7.1995

22. கிராம உதவியாளர்கள் என்ற பணி எந்த ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது ?
1995 இல்

23. அரசு ஆணை எண் 521 இன் சிறப்பு என்ன ?
கிராம உதவியாளர் பணி வரையறுப்பு

24. கிராம உதவியாளர்களின் பணி எந்த ஆண்டு வரையறுக்கப்பட்டது ?
17. 6. 1998இல்

25. கிராம அலுவலர்கள் எங்கு தங்கிப் பணியாற்ற வேண்டும் ?
பொறுப்புக் கிராமத்தில்

26. கிராமக் கணக்குகள் எங்கு வைத்துப் பராமரிக்க வேண்டும் ?
கிராம நிர்வாக அலுவலகத்தில்