TNPSC CCSE TEST - 16
MATHS TEST - 5
1. மூன்று நாணயங்களை ஒரே சமயத்தில் சுண்டும் போது மூன்று நாணயங்களிலும் தலை கிடைக்க நிகழ்தகவு என்ன?
அ) 1/8
ஆ) 1/6
இ) 1/3
ஈ) 1/2
2. 24 திராட்சை கன்றுகளையும் , 18 வாழை கன்றுகளையும் , 12 கரும்பு கன்றுகளையும் ஒரு விவசாயி வாங்குகின்றார். அந்த கன்றுகளை அந்த விவசாயி தன் தோட்டத்தில் வரிசை முறையில் நடுகின்றார் ஒவ்வொரு வரிசையிலும் ஒரே மாதிரியான கன்றுகளை மட்டும் நடுகின்றார் எனில் அவர் குறைந்தது எத்தனை வரிசைகளில் நடுவார்?
அ) 5 வரிசைகள்
ஆ) 6 வரிசைகள்
இ) 9 வரிசைகள்
ஈ) 10 வரிசைகள்
3. ஒரு விடுதியில் 200 நாளைக்கு 120 ஆட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் உள்ளன. 10 நாட்களுக்குப் பின் 60 ஆட்கள் ஊருக்கு சென்றுவிட்டனர். எனவே மீதமுள்ள அட்களுக்கு எத்தனை நாட்களுக்கு மீதம் உள்ள உணவுப் பொருள்கள் வரும்?
அ) 190 நாட்கள்
ஆ) 210 நாட்கள்
இ) 150 நாட்கள்
ஈ) 380 நாட்கள்
4. மூன்று மாடுகளின் சராசரி விலை ரூ. 15000 அவற்றின் விலையின் விகிதம் 3 : 5 : 7 எனில் குறைந்த மாட்டின் விலை என்ன?
அ) 9000
ஆ) 10000
இ) 15000
ஈ) 20000
5. 50% of x + 30% of 90 = 30% of 210 எனில் x -ன் மதிப்பு என்ன?
அ) 72
ஆ) 50
இ) 36
ஈ) 18
6. ஒரு கிராமத்தில் மக்கள் தொகை 825 லிருந்து 858 - ஆக உயர்ந்துள்ளது. அந்த கிராமத்தின் மக்கள் தொகையின் சதவீதம் என்ன?
அ) 2%
ஆ) 3%
இ) 4%
ஈ) 5%
7. 75 - ஐ ஒரு குறிப்பிட்ட எண்ணின் 75% உடன் கூட்டும் போது அந்த குறிப்பிட்ட எண் கிடைக்கின்றது எனில் அந்த எண் எது?
அ) 75
ஆ) 150
இ) 200
ஈ) 300
8. கொடுக்கப்பட்ட மூன்று எண்களில் இரண்டாவதானது முதல் எண்ணின் இரண்டு மடங்கு, மூன்றாவது எண்ணின் மூன்று மடங்கு. இந்த மூன்று எண்களின் சராசரி 44 என்றால் , இதில் மிகப்பெரிய எண்?
அ) 24
ஆ) 36
இ) 72
ஈ) 108
9. கிழே கொடுக்கப்பட்ட எண்களின் இடைநிலை அளவு என்ன?
15, 18, 9, 12, 10, 25, 13
அ) 15
ஆ) 12
இ) 6
ஈ) 13
10. கொடுக்கப்பட்ட உறுப்புகளை ஏறுவரிசை அல்லது இறங்கு வரிசையில் எழுத , அவற்றின் நடு உறுப்பின் மதிப்பு என்ன?
அ) கூட்டுச்சராசரி
ஆ) முகடு
இ) இடைநிலை அளவு
ஈ) வீச்சு
Saharaonlinetest.blogspot.com
No comments:
Post a Comment