Thursday, 27 July 2017

TNPSC GROUP -2A , VAO ( TAMIL PART - 11)



TNPSC GROUP -2A
TNPSC - VAO
TAMIL PART -11

TAMIL SPECIAL TEST - 4

1. தாயுமானவர் யாரிடம் உபதேசம் பெற்றார்?
அ) திருமூலர்
ஆ) மௌனகுரு
இ) காயசித்தர்
ஈ) அச்சணந்தி

2. திருப்பாடல் திரட்டில் எத்தனை பாடல் கண்ணிகளாகவும் வெண்பாக்களாகவும் உள்ளன?
அ) 1736
ஆ) 1452
இ) 771
ஈ)  36, 56

3. படிக்கும் போது உதடுகள் ஒட்டி நிற்கும் குறள் அமைப்பு திருக்குறளின் எந்த குறளில் இடம்பெற்றுள்ளது?
அ) 644
ஆ) 356
இ) 350
ஈ) 244

4. ரா.பி.சேதுப்பிள்ளை முத்தாரம் என புகழாரம் சூட்டுவது வீரமாமுனிவரின் ?
அ) சதுரகராதி
ஆ) தொன்னூல்
இ) காவலூர்க்கலம்பகம்
ஈ) தேம்பாவணி

5. பரமார்த்த குருகதை வீரமாமுனிவரின்?
அ) பக்தி நூல்
ஆ) முக்தி நூல்
இ) நகைச்சுவை நூல்
ஈ) நாடக நூல்

6.  " வளர்பிறை " போன்றது என்று திருவள்ளுவர் குறிப்பிடுவது?
அ) பேதையர் நட்பு
ஆ) அறிவுயடயார் நட்பு
இ) பண்புடையார் நட்பு
ஈ) குணமுடையார் நட்பு

7. குணங்குடி மஸ்தான் சாகிபு ஞானம் பெற்ற இடம்?
அ) யானைமலை
ஆ) கொல்லிமலை
இ) திருவண்ணாமலை
ஈ) புறாமலை

8. குரநிலை, துறவுநிலை, தவநிலை, நியமநிலை, காட்சிநிலை, தியானநிலை, சமான நிலை எனப் பொருள்படும்படி பாடியவர் யார்?
அ) வீரமாமுனிவர்
ஆ) திருத்தணி சரவணப்பெருமாள்
இ) ஆறுமுகநாவலர்
ஈ) சுல்தான் அப்துல் காதிறு

9. ஆறுமுகனார்க்கு நாவலர் பட்டத்தை சூட்டியவர்கள் யார் ?
அ) மதுரை ஆதினம்
ஆ) திருவாவடுதுரை ஆதினம்
இ) திருவாரூர் ஆதினம்
ஈ) திருவரங்க ஆதினம்

10. தஞ்சையில் இருந்து 24 நாட்கள் மாட்டுவண்டியில் பயணம் செய்து உதகை சென்றவர்?
அ) அன்னபூரனி
ஆ) க. சச்சிதானந்தன்
இ) பூதஞ்சேந்தனார்
ஈ) ஜி.யூ.போப்

SaharaTnpscblogspot.com

11. " பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்க " எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்ற நூல் யாது?
அ) கம்பராமாயணம்
ஆ) மகாபாரதம்
இ) பகவத்கீதை
ஈ) திருக்குறள்

12. ஆனந்ததேன் கவிதை (1954)
அ) ஆரியஙகாவுப் பிள்ளை
ஆ) கந்தர் புரி அத்தியட்சர்
இ) வள்ளிக்கண்ணு
ஈ) க.சச்சதானந்தன்

13. ஜி. யூ.போப் தன் 86 - வயதில் ............?
அ) சமயப்பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டார்
ஆ) இங்கிலாந்துக்கு சென்றார்
இ) திருவாசகத்தை மொழிபெயர்த்தார்
ஈ) திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்

14. பொற்குவியல்கள் , புகழுரைகள், மணிமுடி போன்றவை தனக்கு வேண்டாமென்று தன் பாடல்களில் குறிப்பிடுபவர்?
அ) க. சச்சிதானந்தன்
ஆ) நவநீத கிருட்டிண பாரதியார்
இ) ஆரியங்காவுப் பிள்ளை
ஈ) குணங்குடி மஸ்தான் சாகிபு

15. ஏன் , என்ன, எப்போது?, எப்படி?, எங்கே?, யார்? எனும் அன்புத்தொண்டர் ஆறுபேர்கள் அறியச் செய்வார் செய்தியை என்று கூறியவர்?
அ) கந்தர் புரி அத்தியட்சர்
ஆ) அறிஞர் ஸடென்லி
இ) அறிஞர் கிபரான்
ஈ) கிப்ளிங்

16. பத்திரிக்கைப் பெண்ணை பார்த்து " காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீ தான் " என்று பாராட்டியவர்?
அ) இந்தியன் எக்ஸ்பிரஸ்
ஆ) பாரதிதாசன்
இ) ஹார்வார்டு மார்க்
ஈ) கவிஞர் பைரன்

17. நைடதம் என்பது?
அ) நளனின் வரலாற்றை பற்றி கூறும் வேரு நூல்
ஆ) தமயந்தியின் வரலாற்றைப்பற்றி கூறும் வேரு நூல்
இ) சந்திரன் சுவர்க்கியின் வரலாற்று நூல்
ஈ) புகழேந்தி புலவரின் வரலாற்று நூல்

18. " தேன்நுகர் வண்டு மனுதனை உண்டு" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்?
அ) நளவெண்பா
ஆ) திருவள்ளுவ மாலை
இ) சீவகசிந்தாமணி
ஈ) விவேகசிந்தாமி

19. இக்கால ஒளவையார்?
அ) லீலாவதி
ஆ) அம்மாக்கண்ணு
இ) அஞ்சலையம்மாள்
ஈ) அசலாம்பிகை ஆம்மையார்

20. தென்னாட்டின் ஜான்சிராணி?
அ) அம்புஜத்தம்மாள்
ஆ) அஞ்சலையம்மாள்
இ) அசலாம்பிகை அம்மையார்
ஈ) அம்மாக்கண்ணு
SaharaTnpscblogspot.com

Wednesday, 26 July 2017

TNPSC GROUP -2A , VAO ( TAMIL PART - 10)



TNPSC GROUP -2A
TNPSC VAO

TAMIL SPECIAL TEST -3

1. " என்பணிந்த தென்கமலை " தென்கமலை உணர்த்தும் பொருள்?
அ) திருவரங்கம்
ஆ) திருவண்ணாமலை
இ) திருவாரூர்
ஈ) திருச்சி

2. "மயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை" என்ற வரி இடம்பெற்ற நூல்?
அ) சிலப்பதிகாரம்
ஆ) பரிபாடல்
இ) சிறுபாணாற்றுப்படை
ஈ) புறநானூறு

3. நான்காவது தமிழ்சங்கம் தோற்றுவித்தவர்?
அ) உ.வே.ச
ஆ) வள்ளியப்பா
இ) பாண்டித்துரைத்தேவர்
ஈ) செரு அடுதோல் நல்லாதான்

4. உயிரின் முதலே என பிச்சமூர்த்தி போற்றுவது?
அ) நிலா
ஆ) அம்மாவாசை
இ) பௌரணமி
ஈ) கதிரவன்

5. முறுவல் என்பது?
அ) இலக்கிய நூல்
ஆ) நாடக இலக்கண நூல்
இ) நாட்டிய இலக்கண நூல்
ஈ) கலை இலக்கிய நூல்

6. மதுரை சபாபதி முதலியார் யார்?
அ) பரிதிமாற் கலைஞரின் ஆசிரியர்
ஆ) இராமிங்க அடிகளாரின் ஆசிரியர்
இ) உ.வே.சா -வின் ஆசிரியர்
ஈ) இவற்றில் எவரும் இலர்

7. " பூவின் விவரம் பலகோடி" எனத்தொடங்கும் பாடலின் நாடகம் எது?
அ) இலவகுசா
ஆ) சதிஅனுசா
இ) வள்ளிதிருமணம்
ஈ) சதிசுலோசனா

8. எமன், இராவணன் வேடம் புனைந்தவர்?
அ) பரிதிமாற் கலைஞர்
ஆ) சங்கரதாஸ் சுவாமிகள்
இ) பம்மல் சம்பந்தனார்
ஈ) மதிவாணன்

9. ஷேக்ஸ்பியரின் நாடகங்களை தழுவி தமிழில் எழுதப்பட்டது?
அ) விரும்பிய விதமே
ஆ) அங்கோர் நகரியம்
இ) எங்கே எந்தன் நாடு
ஈ) யாருக்காக யார்

10. முக்கூடற்பள்ளுவில் பேசப்படும் பேச்சு வழக்கு?
அ) மதுரை பேச்சு வழக்கு
ஆ) கோவை பேச்சு வழக்கு
இ) சென்னை பேச்சு வழக்கு
ஈ) நெல்லை பேச்சு வழக்கு

11. " மாதங்கம் " என்பது?
அ) சிங்கம்
ஆ) யானை
இ) பூலி
ஈ) கரடி

12. மலையருவி நூலின் ஆசிரியர்?
அ) அந்தகக்கவி வீரராகவர்
ஆ) இராமவள்ளல்
இ) மயிலேறும் பெருமாள்
ஈ) கி. வா. ஜகந்நாதன்

13. "சிறை அயனுக்காயின் " என்ற வரி இடம்பெற்ற நூல்?
அ) திருச்செந்திற்கலம்பகம்
ஆ) சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்
இ) சந்திரவாணன் கோவை
ஈ) சேயூர்க்கலம்பகம்

14. காமத்திலகன் - என்பவர் யார்?
அ) சீவகன்
ஆ) குகன்
இ) இராமன்
ஈ) கண்ணன்

15. "வீழ்ந்து, வெண்மழை  தவழும் விண்ணுறு பெருவரை பெரும்பாம்பு" எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்ற நூல் யாது?
அ) நரிவிருத்தம்
ஆ) முக்கூடற்பள்ளு
இ) அச்சணந்தி
ஈ) சீவகசிந்தாமணி

16. சித்தன்னவாசலில் ஓவியம் வரைந்த ஆசிரியர்?
அ) இளம்கௌதமன்
ஆ) கிளவிவல்லோன்
இ) வித்தக வினைஞன்
ஈ) சித்திரசேனர்

17. " ஆடபரி " பொருள் தருக?
அ) ஓடுகின்ற குதிரை
ஆ) போர்க்குதிரை
இ) அழங்காரக் குதிரை
ஈ) ஆடுகின்ற குதிரை

18. திருவாரூர் கோவிலின் பெயர்?
அ) மாங்கோவில்
ஆ) பூங்கோவில்
இ) திருக்கோவில்
ஈ) குலக்கோவில்

19. மதோன் மத்தர் என்பவர் யார்?
அ) இந்திரன்
ஆ) சிவபெருமான்
இ) முருகன்
ஈ) இராமன்

20. இவற்றில் எது தவறு?
அ) காமுறுவர் - கோபக்காரர்
ஆ) கடையர் - தாழ்ந்தவர்
இ) மாடு - செல்வம்
ஈ) பசுடு - எருது

SaharaTnpscblogspot.com

Wednesday, 19 July 2017

TNPSC GROUP -2A ,VAO (TAMIL PART -9)




TNPSC GROUP -2A
TNPSC  - VAO

TAMIL SPECIAL  TEST - 2

1. சிறந்த பத்து இடம்பெறும் நூல் யாது?
அ) நான்மணிக் கடிகை
ஆ) அறவுரைக்கோவை
இ) தண்டியலங்காரம்
ஈ) முத்தொள்ளாயிரம்

2. எண்ணெய் கிராமத்தில் பிறந்தவர்?
அ) திரிகூடராசப்ப கவிராயர்
ஆ) அந்தக்கவி வீரராகவர்
இ) மீனாட்சி சுந்தரம்
ஈ) வி.கே.டி.பாலன்

3. "எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே" என்ற வரி இடம்பெற்ற நூல்?
அ) புறநானூறு
ஆ) ஐங்குறுநூறு
இ) பதிற்றுபத்து
ஈ) தொல்காப்பியம்

4. செம்மொழிகளை பட்டியலிட்ட மொழியியல் அறிஞர்?
அ) சாலை இளந்திரையன்
ஆ) ச.அகத்தியலிங்கம்
இ) டாக்டர்.கிரௌல்
ஈ) உ.வே.சா

5. சொல்ல துடிக்குது மனசு என்ற நூலை எழுதியவர் யார்?
அ) கவிஞர் பைரன்
ஆ) பாலசுப்பிரமணியன்
இ) ந. காமராசு
ஈ) வி.கே.டி.பாலன்

6. "யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கிய போது நான் காப்பேன்" என்றவர்?
அ) டாக்டர். கிரௌல்
ஆ) டாக்டர். உ.வே.சா
இ) டாக்டர் . கால்டுவெல்
ஈ) டாக்டர். வைகாட்ஸ்கி

7.  முத்துக்கதைகள் எனும் கதைத் தொகுப்பின் ஆசிரியர் யார்?
அ) செரு அடுதோள் நல்லாதன்
ஆ) சீவகன்
இ) குகன்
ஈ) நீலவன்

8. "நாளை என் தாய்மொழி சாகுமானால் இன்றே நான் இறந்து விடுவேன்" என்றவர்?
அ) ஸ்டேர்ன்
ஆ) கால்டுவெல்
இ) ரசூல் கம்சதேவ்
ஈ) ச.அகத்தியலிங்கம்

9. " தமிழ் என்னை ஈர்த்தது , குறளோ என்னை இழுத்தது " என்றவர்?
அ) சாலை இளந்திரையன்
ஆ) டாக்டர் . கிரௌல்
இ) கால்டுவெல்
ஈ) ஐி .யு. போப்

SaharaTnpscblogspot.com

10. "தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து  இயங்குவது மட்மின்றித் தழைத்தோங்கவும் செய்யும் " என்று கூறியவர் யார்?
அ) கால்டுவெல்
ஆ) ச.அகத்தியலிங்கம்
இ) கிரௌல்
ஈ) ரசூல் கம்சதேவ்

11. எதிரி நாட்டு ஒற்றன் என நினைத்து இளந்தரையனை சிறையில் அடைத்தது?
அ) கோவூர்கிழார்
ஆ) கிள்ளிவளவன்
இ) நலங்கிள்ளி
ஈ) நெடுங்கிள்ளி

12. " மீனாட்சி சுந்தரனார் " சரியாக பொருத்து
அ) நண்பர் ஆறுமுகம்
ஆ) நண்பர் உ.வே.சா
இ) நண்பர் குலாம்காதர்
ஈ) நண்பர் தியாகராசர்

13. 1880- ஆண்டு 15 வயதில் கணிதத்தில் சிறந்து விளங்கியவர்?
அ) ஆர்தர்பெர்சி
ஆ) ஈ.எச்.நெவில்
இ) இராமனுஜர்
ஈ) கார்

14. "சூலியன் கக்சுலி" என்பவர் இராமானுஜரை பற்றி கூறியது?
அ) முதல் தரமான கணிதமேதை
ஆ) 20 வது நூற்றாண்டின் மிகப்பெரிய கணிதமேதை
இ) வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஓர் இடத்தை பெற்ற பிறவிக் கணிதமேதை
ஈ) ஆய்லராக இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் ஒரு ஜாகோபி

15. " வரதன் " யாருடைய இயற்பெயர்?
அ) பலபட்டை சொக்கநாத புலவர்
ஆ) நல்லூர் நத்தத்தனார்
இ) காளமேகப் புலவர்
ஈ) மு. கருணாநிதி

16.தனிப்பாடல் திரட்டு நூலைத் தொகுபித்தவர் யார்?
அ) மதுரை மன்னர் திருமலைநாயக்கர்
ஆ) இராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமி
இ) தஞ்சை மன்னர் இராசாஜி
ஈ) சேர மன்னர் பெருஞ்சேரல் இரும்பொறை

17. பயிற்றுமொழி குறித்து சிந்திக்காமல் கல்வி கற்பது , அடித்தளம் இல்லாமல் கட்டடத்தை எழுப்புவதை   போன்றது- என்றவர்?
அ) காந்தி
ஆ) நேரு
இ) இராசாஜி
ஈ) அம்பேத்கார்

18. இரு கணங்களின் கூட்டுத்தொகையாக வரும் எண்களில் சிறிய எண் எது? (ஹார்டி கார்)
அ) 1723
ஆ) 1725
இ) 1727
ஈ)   1729

19. காளமேகப் புலவர்
அ) எறும்புத்தன் கையால் எண்சான்
ஆ) இருபொருள் அமைய நகைச்சுவையுடன் பாடுபவர்
இ) தாய்மொழியில் அறிவை பெறுவதே சிறந்தது
ஈ) குழந்தை கல்வி

20. "குழந்தை இலக்கியம்"  எழுதியவர்?
அ) கண்ணதாசன்
ஆ) செல்லிதாசன்
இ) பாரதிதாசன்
ஈ) வாணிதாசன்
 SaharaTnpscblogspot.com

TNPSC GROUP -2A , VAO (TAMIL PART-8)




TNPSC GROUP -2A
(TAMIL PART-8)

SPECIAL TEST -1

1.எழுத்தறியும் பெருமான் மாலை எழுதியது யார்?
அ) சமனத் துறவி
ஆ) வீரத் துறவி
இ) பௌத்த துறவி
ஈ) புரட்சி துறவி

2. மனுமுறைகண்ட வாசகம்
அ) சீவகன் வரலாறு
ஆ) மனுநீதி சோழன் வரலாறு
இ) பாரசசேகர மன்னன் வரலாறு
ஈ) கரிகாலன் வரலாறு

3. அறிவுநெறி விளங்க சத்திய  ஞானசபையை நிறுவியபோது இராமலிங்கரின் வயது?
அ) 42
ஆ) 44
இ) 47
ஈ) 49

4. அடிகளாரை "புதுநெறி கண்ட புலவர் " என்றவர்?
அ) பாரதிதாசன்
ஆ) பாரதியார்
இ) வானிதாசன்
ஈ) காமராசன்

5. இராமலிங்க அடிகளாரின் ஆசிரியர்?
அ) மீனாட்சி சுந்தரம்
ஆ) தைரியநாதசாமி
இ) காஞ்சி மகாவித்வான்
ஈ) எம்பார்

6. ஆறுமுக நாவலர் மருட்பா என்று கூறியது?
அ) திருவருட்பா
ஆ) சின்மயதீபிகை
இ) எழுத்தறியும் பெருமான் மாலை
ஈ) வடிவுடைமாணிக்க மாலை

7. வடிவுடைமாணிக்க மாலை
அ) திருவெற்றியூர் சிவரெுமான் மீது பாடப்பட்டது
ஆ) கந்தகோட்டத்து இறைவன் மீது பாடப்பட்டது
இ) பழனி முருகன் மீது பாடப்பட்டது
ஈ) தஞ்சை பிரகதீஸ்வரர்  மீது பாடப்பட்டது

8. ஐீவகாருண்யம் பேரின்ப வீட்டின் திறவுகோல் என்பது அடிகளாரின்?
அ) கோட்பாடு
ஆ) தாரகமந்திரம்
இ) கொள்கை
ஈ) குறிக்கோள்

9. அடிகளாரின் 42 வது வயதில் நிறுவியது?
அ) சத்திய ஞானசபை
ஆ) தருமச்சாலை
இ) ஆன்மீகஇல்லம்
ஈ) சமரச சன்மார்க்க சங்கம்

10. காஞ்சி மகாவித்வான் சபாபதி முதலியாரின் மாணவரால்  பதிப்பிக்கப்பட்டது?
அ) ஞானரதம்
ஆ) பதஞ்சலி யோக சூத்திரம்
இ) ஒழுவிலொடுக்கம்
ஈ) அருட்பெரும்ஜோதி

SaharaTnpscblogspot.com

11. கேலிச்சித்திரம் எனும் வரையும் முறையை தமிழுக்கு முதலில் தந்தவர்?
அ) பாரதிதாசன்
ஆ) பாரதியார்
இ) வானிதாசன்
ஈ) செல்லிதாசன்

12. "காளிதாசன் ஓர் உத்தம தேசபிமானி" என்பவர் யார்?
அ) இராபி.சேதுபிள்ளை
ஆ) உமறுப்புலவர்
இ) பாரதிதாசன்
ஈ) பாரதியார்

13. "கிறுக்கன் "என்பவர்?
அ) மு. வெ.கங்காதரன்
ஆ) பாரதிதாசன்
இ) க.அப்பாதுரை
ஈ) கமனசித்தர்

14. "சக்கரவர்த்தினி" என்பது பாரதியாரின் ?
அ) அரசியல் இதழ்
ஆ) மகளிர் மாத இதழ்
இ) மக்கள் இதழ்
ஈ) ஆன்மீக இதழ்

15. மனிதனின் இறப்பை நோய் நீக்கி காப்பது?
அ) பைபீலவாதம்
ஆ) அனங்கு
இ) காயசித்தி
ஈ) கீழாநெல்லி

16. பாரதியாரின் ஞானகுரு?
அ) சாரு நிவேதிதா
ஆ) அஞ்சலையம்மாள்
இ) அம்புசத்தம்மாள்
ஈ) மூவாலூா் இராமமிர்தம் அம்மையார்

17. வேணுநாயக்கர் வீட்டு திருமணத்தில் சந்தித்து கொண்டவர்கள்?
அ) பாரதி,பாரதிதாசன்
ஆ) ந.காமராசன், பாலசுப்பிரமணியன்
இ) மு.வெ.கங்காதரன், க.அப்பாத்துரை
ஈ) சிவப்பிரகாசர், கமனசித்தர்

18. சிவப்பிரகாசர் என்பவர் யார்?
அ) பன்மொழிப்புலவர்
ஆ) பைந்தமிழ்ப்பாவலர்
இ) தெய்வப்புலவர்
ஈ) கற்பனைக் களஞ்சியம்

19. குடும்பக்கட்டுப்பாடு பற்றி முதன்முதலில் பாட்டெழுதியவர்?
அ) காளிதாசன்
ஆ) சக்திதாசன்
இ) பாரதிதாசன்
ஈ) சாவித்திரி என்ற நிருபநேயர்

20. குருகூர் என்பது ?
அ) ஆழ்வார் திருநகரி
ஆ) திருவானைக்காவல்
இ) பொய்யாமாழி
ஈ) திருவாரூர்

Saturday, 8 July 2017

TNPSC GROUP -2A (TAMIL PART-7)




TNPSC GROUP -2A
TAMIL PART - 7
 
பாடலை பாடியவர்கள் யார்

1. பாரதியார் உலகவி! அகத்தில் அன்பும் - எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
- பாரதிதாசன்

2. " எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம்நோக்கி நடக்கின்ற திறந்தவையம்" - என்று பாடியவர் யார்?
- பாரதிதாசன்

3. " எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே " - என்று பாடியவர் யார்?
- பாரதிதாசன்

4. " கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழன் சொல்லை மணியாகத் தொடுத்தவனும் நீதானோ " -  எனத்தாலாட்டு படியவர் யார்?
- கவிமணி

5. " மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா " - என்று பாடியவர் யார்?
- கவிமணி

6. " சாலைகளில் பல தொழில்கள் பெருகவேண்டும் , சபைகளிலே தமிழ் எழுந்து முழங்க வேண்டும் " - என்று பாடியவர் யார்?
- கவிமணி

7. " பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும் , பணமொன்றே மோகத்தின் விசைதீர வேண்டும் " - என்று பாடியவர் யார்?
- நாமக்கல் கவிஞர்

8. " தமிழன் என்றோர் இனமுன்டு, தனியே அவற்கொரு குணமுண்டு " - என்றும் கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் ' - என்று பாடியவர் யார்?
- நாமக்கல் கவிஞர்

9. ' ஆங்கிலமோ பிறமொழியோ பயின்றுவிட்டால் ' - எனத் தொடங்கும் கவிதையை   பாடியவர் யார்?
- முடியரசன்

10. ' ஏழையின் குடிசையில் , அடுப்பும் விளக்கும் தவிர, எல்லாமே எரிகின்றன ' - என்று பாடியவர் யார்?
- வல்லிக்கண்ணன்

11. " இருட்பகை இரவி இருளெனத் தம்மையும் " - எனத் தொடங்கும் பாடலை பாடியவர் யார்?
- மனோன்மணியம் பெ.சுந்தரனார்

12. " வாரிக் களத்தடிக்கும் வந்தபின் கோட்டைபுகும் " - எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
- காளமேகப் புலவர்

13. " திரைகடல் ஓடியும் திரவியம் தேடு " - என்று பாடியவர் யார்?
- ஒளவையார்

14. " யாதும் ஊரே யாவரும் கேளீர் " - என்று பாடியவர் யார்?
- கனியன் பூங்குன்றனார்

15. " மண்ணுலகத்திலே உயிர்கள்தாம் வருந்தும் " - எனத் தொடங்கும் பாடலை பாடியவர் யார்?
- வள்ளலார்

SaharaTnpscblogspot.com

Thursday, 6 July 2017

TNPSC GROUP -2A (TAMIL PART-6)




வரி    -  நூல்   - ஆசிரியர்

1. அறிவு ஆற்றம் காக்கும் கருவி - என்ற வரியின் ஆசிரியர் யார்?
- திருவள்ளுவர்

2. 'அண்டப்பகுதிகள் உண்டைப் பிறக்கும் ' & புல்லாகி பூடாய் - என்ற வரிகள் இடம் இடம்பெற்றுள்ள நூல் எது?
- திருவாசகம்

3. "வறிது நிலைஇய காயமும்" & வலவன் ஏவா வானூர்தி & "உறுமிடத்துதவா உவர்நிலம்" என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
- புறநானூறு

4. ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின் - என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
- சிலப்பதிகாரம்

5. பயவாக் களானையர் கல்லாதவர் - என்ற வரியின் ஆசிரியர் யார்?     - திருவள்ளுவர்

6. "அணுவை துளைத்து ஏழ்கடலை புகட்டி" என்ற வரியின் ஆசிரியர்?
- ஒளவையார்

7. ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன் - என்ற வரியின் ஆசிரியர்?
- கம்பர்

8. நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி - என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
- திருக்குறள்

SaharaTnpscblogspot.com

9. உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி - என்ற வரியின் ஆசிரியர்?
- கம்பர்

10. தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த - என்ற வரி இடம்பெற்றுள்ள எது?
- பதிற்றுபத்து

11. "அந்தக் கேணியும் எந்திரக்கிணரும் " என்ற வரி இடம் பெற்றுள்ள நூல் எது ?
- பெருங்கதை

12. "ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின் "  என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
- சிலப்பதிகாரம் (கனிமவளம் பற்றிக் கூறுகிறது)

13. "பயவாக் களானையர் கலலாதவர்" என்ற வரி இடம் பெற்றநூல் எது?
- திருக்குறள் (மண்ணியல் அறிவு பற்றிக் கூறுகிறது)

14. "ஓர் அணுவினைச் சத கூறிட்டகோணினும் உளன்" என்ற வரி இடம் பெற்ற நூல் எது?
- திருவள்ளுவமாலை      ( அணுவியல் அறிவு பற்றி கூறுகிறது)

15. "உடம்பிடை தோன்றிற்றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி " என்ற வரி இடம்பெற்ற நூல் எது?
- கம்பராமாயணம்  (அறுவை மருத்தவம் பற்றிக் கூறுகிறது)

16. "தீம்பிழி எந்திரம் பந்தல் வருத்த" என்ற வரி இடம் பெற்றநூல் எது?
- பதிற்றுபத்து (பெறியியல் அறிவு பற்றிக் குறுகிறது)

17. "உடம்பார் அழியின் உயிரார் அழிவர்" என்ற வரி இடம் பெற்றள்ள வரி எது?
- திருமந்திரம் (மருத்துவ அறிவு பற்றிக் கூறுகிறது)

Tuesday, 4 July 2017

TNPSC GROUP -2A. (MATHS PART -2)




TNPSC GROUP -2A

MATHS PART-2

1) இரட்டை எண்களின் பொது உறுப்பு 2n

2) ஒற்றை எண்களின் பொது உறுப்பு 2n +1

3) கூட்டுத்தொடரின் பொது அழைப்பு a,a+d, a+2d, a+3d இதில் a முதல் எண், d வித்தியாசம்

4) இயல் எண்களின் கூட்டுத்தொடர் (1,2,3,4,......n)

5) ∑n = n(n+1)/2

6) இங்கு n என்பது கொடுக்கப்பட்ட தொடரின் கடைசி எண்ணாகும்.

7) முதல் n ஒற்றை எண்களின் கூட்டுப்பலன் (1, 3, 5, 7, .......n )

8) Tn = a + (n-1) d  இங்கு  d  என்பது இரு எண்களுக்கிடையே உள்ள வித்தியாசம் ஆகும்.

9) முதல் n  இயல் எண் வர்க்கங்களின் கூடுதல் n (2, 4, 6, 8, .......n)

10) ∑n2 = n(n+1) (2n +1)/6

11) முதல் n  இயல் எண் களங்களின் கூடுதல் n (3, 6, 9, .......n)

12) ∑n3 = n (n+1)2/2

13. 121 = 11 11க்கு கீழ் உள்ள பகா எண்கள்
2, 3, 5, 7, 11 இதில் 121 ஐ 11 வகுக்கிறது. எனவே 121 பகா எண் அல்ல. 121 ஓர் பகு எண் ஆகும்.
வாழ்வியல் கணிதம்

14. 120 பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகத்தில், ஒவ்வொரு பக்கத்திலும் 45 வரிகள் உள்ளன. ஒரு பக்கத்திற்கு 24 வரிகள் மட்டும் இருந்தால் புத்தகத்தில் 225 பக்கங்கள் இருக்கும்.

15.ஒரு பணியாளர் ரூ.11,2520 ஐ ஊக்கத் தொகையாக பெறுகிறான். இது அவரின் ஆண்டு வருமானத்தில் 15% எனில் அவரது மாத வருமானம் ரூ.6250

16. 250 மாணவர்கள் கொண்ட ஒரு பள்ளியில் 55 மாணவர்கள் கூடைப்பந்தையும், 75 பேர் கால்பந்தையும், 63 பேர் எறிபந்தையும் மீதம் உள்ளவர்கள் கிரிக்கெட்டையும் விரும்புகிறார்கள் எனில், கூடைப்பந்து மற்றும் எறிபந்தை விரும்பும் மாணவர்களின் சதவீதம் என்ன?
மொத்த மாணவர்களின் எண்ணிக்கை = 250
கூடைப் பந்து             = 55
இதனை 55/250 எனக் குறிப்பிடலாம். 55/250x100=22%
எறிபந்து = 63
63/250  எனக் குறிப்பிடலாம்
63/250x100=25.2%

17. கொடுக்கப்பட்ட n எண்களில் (n>1) ஒரு எண் 1-1/n மற்ற எண்கள் அனைத்தும் ஒன்றுகள் எனில் n எண்களின் சராசரி 1-1/n2

18. சார்பகா எண்ணுக்கு ஒரு உதாரணம் - (3,5)

19. 2005ல் ஒரு நகரத்தின் மக்கள் தொகை 1,50,000 அடுத்த ஆண்டில் அது 10% அதிகரிக்கும் என்றால் 2006ல் என்னவாக இருக்கும்.
2005ல் - 1,50,000
அதிகரிப்பது = 10/100x150000 = 15,000
2006ல் மக்கள் தொகை = 1,50,000 + 15000 = 1,65,000

20. விகித முறை எண்கள் : Q = [2,-3,-7...]

21. விகித முறை எண்களை Q என்ற எழுத்தால் குறிக்கலாம்.

22. எல்லா முழுக்களும் விகிதமுறு எண்களாகும்.

Sunday, 2 July 2017

TNPSC GROUP -2A (MATHS PART-1)



TNPSC GROUP 2A (MATHS-1)

வீச்சு

விளக்கம் : கொடுக்கப்பட்ட எண் தொகுப்பில் உள்ள மிகப்பெரிய எண்ணிலிருந்து மிகச்சிறிய எண்ணைக் கழித்தால் ,கிடைக்கும் விடையே வீச்சு எனப்படும்
1. 43, 24, 38, 56, 22, 39, 45 ஆகிய  புள்ளி விபரங்களின் வீச்சு காண்க.
முதலில் எண்களை ஏறு வரிசையில் அமைக்கவும்.
22, 24, 38, 43, 45, 56
வீச்சு = 56 - 22 =34

2. ஒரு  புள்ளி விபர்த்தி்ன் மீச்சிறு மதிப்பு 12. அதன் வீச்சு 59 எனில் , அப்புள்ளி விபரத்தின் மீப்பெரு மதிப்பைக் காண்க.
கணக்கின்படி:
  மீச்சிறு மதிப்பு  (S)  =12
                  வீச்சு   (R)    =59
மீப்பெரு மிதிப்பு (L) = S + R
                                         =12+59=71
       மீப்பெரு மதிப்பு =71

3. 50 அளவுகளின் மிகப்பெரிய மதிப்பு 3.84 கி.கி. அதன் வீச்சு 0.46 கி.கி. எனில் , அவற்றின் மீச்சிறு மதிப்பை காண்க.
கணக்கின்படி :
மீப்பெரு மதிப்பு (L) = 3.84
                 V. வீச்சு (R) = 0.46
   மீச்சிறு மதிப்பு (S) = L - R
                                        = 3.84 - 0.46
                                        = 3.38
        மீச்சிறு மதிப்பு = 3.38

4. முகடு

விளக்கம்: கொடுக்கப்பட்ட எண்களில் , எந்த எண் அதிக தடவை இடம் பெற்றுள்ளதோ , அதுவே முகடு எனப்படும்.

15, 10, 8, 6, 4, 8, 22,12, 6, 8, 20,15 என்ற புள்ளி விபரத்தின் முகடு யாது?
தீர்வு : முதலில் ஏறுவரிசைப் படுத்துவோம் .
4, 6, 6, 8, 8, 8, 10, 12, 15, 15, 20, 22
இதில் அதிகமுறை இடம் பெற்ற எண் 8.
எனவே , முகடு = 8