Sunday, 2 July 2017

TNPSC GROUP -2A (MATHS PART-1)



TNPSC GROUP 2A (MATHS-1)

வீச்சு

விளக்கம் : கொடுக்கப்பட்ட எண் தொகுப்பில் உள்ள மிகப்பெரிய எண்ணிலிருந்து மிகச்சிறிய எண்ணைக் கழித்தால் ,கிடைக்கும் விடையே வீச்சு எனப்படும்
1. 43, 24, 38, 56, 22, 39, 45 ஆகிய  புள்ளி விபரங்களின் வீச்சு காண்க.
முதலில் எண்களை ஏறு வரிசையில் அமைக்கவும்.
22, 24, 38, 43, 45, 56
வீச்சு = 56 - 22 =34

2. ஒரு  புள்ளி விபர்த்தி்ன் மீச்சிறு மதிப்பு 12. அதன் வீச்சு 59 எனில் , அப்புள்ளி விபரத்தின் மீப்பெரு மதிப்பைக் காண்க.
கணக்கின்படி:
  மீச்சிறு மதிப்பு  (S)  =12
                  வீச்சு   (R)    =59
மீப்பெரு மிதிப்பு (L) = S + R
                                         =12+59=71
       மீப்பெரு மதிப்பு =71

3. 50 அளவுகளின் மிகப்பெரிய மதிப்பு 3.84 கி.கி. அதன் வீச்சு 0.46 கி.கி. எனில் , அவற்றின் மீச்சிறு மதிப்பை காண்க.
கணக்கின்படி :
மீப்பெரு மதிப்பு (L) = 3.84
                 V. வீச்சு (R) = 0.46
   மீச்சிறு மதிப்பு (S) = L - R
                                        = 3.84 - 0.46
                                        = 3.38
        மீச்சிறு மதிப்பு = 3.38

4. முகடு

விளக்கம்: கொடுக்கப்பட்ட எண்களில் , எந்த எண் அதிக தடவை இடம் பெற்றுள்ளதோ , அதுவே முகடு எனப்படும்.

15, 10, 8, 6, 4, 8, 22,12, 6, 8, 20,15 என்ற புள்ளி விபரத்தின் முகடு யாது?
தீர்வு : முதலில் ஏறுவரிசைப் படுத்துவோம் .
4, 6, 6, 8, 8, 8, 10, 12, 15, 15, 20, 22
இதில் அதிகமுறை இடம் பெற்ற எண் 8.
எனவே , முகடு = 8

1 comment:

  1. மிகத்தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.

    ReplyDelete