Saturday, 8 July 2017

TNPSC GROUP -2A (TAMIL PART-7)




TNPSC GROUP -2A
TAMIL PART - 7
 
பாடலை பாடியவர்கள் யார்

1. பாரதியார் உலகவி! அகத்தில் அன்பும் - எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
- பாரதிதாசன்

2. " எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம்நோக்கி நடக்கின்ற திறந்தவையம்" - என்று பாடியவர் யார்?
- பாரதிதாசன்

3. " எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே " - என்று பாடியவர் யார்?
- பாரதிதாசன்

4. " கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழன் சொல்லை மணியாகத் தொடுத்தவனும் நீதானோ " -  எனத்தாலாட்டு படியவர் யார்?
- கவிமணி

5. " மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா " - என்று பாடியவர் யார்?
- கவிமணி

6. " சாலைகளில் பல தொழில்கள் பெருகவேண்டும் , சபைகளிலே தமிழ் எழுந்து முழங்க வேண்டும் " - என்று பாடியவர் யார்?
- கவிமணி

7. " பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும் , பணமொன்றே மோகத்தின் விசைதீர வேண்டும் " - என்று பாடியவர் யார்?
- நாமக்கல் கவிஞர்

8. " தமிழன் என்றோர் இனமுன்டு, தனியே அவற்கொரு குணமுண்டு " - என்றும் கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் ' - என்று பாடியவர் யார்?
- நாமக்கல் கவிஞர்

9. ' ஆங்கிலமோ பிறமொழியோ பயின்றுவிட்டால் ' - எனத் தொடங்கும் கவிதையை   பாடியவர் யார்?
- முடியரசன்

10. ' ஏழையின் குடிசையில் , அடுப்பும் விளக்கும் தவிர, எல்லாமே எரிகின்றன ' - என்று பாடியவர் யார்?
- வல்லிக்கண்ணன்

11. " இருட்பகை இரவி இருளெனத் தம்மையும் " - எனத் தொடங்கும் பாடலை பாடியவர் யார்?
- மனோன்மணியம் பெ.சுந்தரனார்

12. " வாரிக் களத்தடிக்கும் வந்தபின் கோட்டைபுகும் " - எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
- காளமேகப் புலவர்

13. " திரைகடல் ஓடியும் திரவியம் தேடு " - என்று பாடியவர் யார்?
- ஒளவையார்

14. " யாதும் ஊரே யாவரும் கேளீர் " - என்று பாடியவர் யார்?
- கனியன் பூங்குன்றனார்

15. " மண்ணுலகத்திலே உயிர்கள்தாம் வருந்தும் " - எனத் தொடங்கும் பாடலை பாடியவர் யார்?
- வள்ளலார்

SaharaTnpscblogspot.com

No comments:

Post a Comment