TNPSC CCSE TEST -28
7th STD TAMIL TEST -1
1. தொழிலாளர் நலனுக்கும் பெண்கள் முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபட்டவர் யார்?
A). பெரியார்
B). திரு.வி.க
C). தேவர்
D). அம்பேத்கர்
2. சென்னை ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றியவர் யார்?
A). பாரதியார்
B). பாரதிதாசன்
C). திரு.வி.க
D). சுரதா
3. புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப்படும் – இக்குறட்பாவில் உள்ள சரியான பொருள் எது?
A). தீங்கு தராத சொற்களை பேசுதல்
B). உடல் தூய்மை நீரால் உண்டாகும் உள்ளத்தூய்மை வாய்மையால் வெளிப்படும்
C). தன் நெஞ்சமே தன்னை வருத்தும்
D). பொய் பேசாமை ஒருவனுக்கு எல்லாப் புகழையும் தரும்
4. தமிழ் பிறமொழி துணையின்றி தனித்து இயங்குவது மட்டுமன்றித் தழைத்தோங்கவும் செய்யும் என்று கூறியவர்?
A). டாக்டர் கிரௌல்
B). கால்டுவெல்
C). ஜி.யு.போப்
D). வீரமாமுனிவர்
5. வாழ்வியலுக்கு இலக்கணம் கூறும் மொழி
A). வடமொழி
B). தெலுங்கு
C). தமிழ்
D). சமஸ்கிருதம்
6. நாயக்க மன்னர்கள் தமிழகத்தை -------பாளையங்களாகப் பிரித்துத் தம் ஆளுகைக்குட்படுத்தினர்
A). 70
B). 75
C). 72
D). 76
7. ஆய்தம் ---- எழுத்து வகையைச் சார்ந்தது
A). முதல் எழுத்து
B). மெய்யெழுத்து
C). சார்பெழுத்து
D). உயிர் எழுத்து
8. வேன்மிகு தானை வேந்தற்கும் கடனே --- இப்பாடல் வரி இடம்பெற்ற நூல்?
A). அகநானூறு
B). ஐங்குறுநூறு
C). புறநானூறு
D). நற்றிணை
9. முதுமொழிக்காஞ்சி ------ என வழங்கப்பெறும்.
A). நன்னெறி
B). அறநூல்
C). அறவுரைக் கோவை
D). நீதி நூல்
10. மீனாட்சி சுந்தரனார் பிறந்த ஆண்டு
A). 1810
B). 1812
C). 1814
D). 1815
11. தமிழகத்திலுள்ள பல்வேறு கோவில்களுக்கு நடைப்பயணம் மேற்கொண்டு அக்கோவில்களைப் பற்றி தலப்புராணம் பல இயற்றியவர் யார்?
A). உ.வே.சா.
B). மீனாட்சி சுந்தரனார்
C). பெருஞ்சித்திரனார்
D). மு.வ
12. ”அறம் பெருகும் தமிழ் படித்தால், அகத்தில் ஒளி பெருகும், திறம்பெருகும் உரம் பெருகும், தீமைக் கெதிர் நிற்கும்” - என்று பாடியவர்?
A). உ.வே.சா.
B). மீனாட்சி சுந்தரனார்
C). பெருஞ்சித்திரனார்
D). பாரதிதாசன்
13. நாளை என் தாய்மொழி சாகுமானால் இன்றே நான் இறந்து விடுவேன் என்று கூறியவர்
A). ரசூல் கம்சதேவ்
B). பாரதியார்
C). பாரதிதாசன்
D). வாணிதாசன்
14. உயிர்மெய் எழுத்துக்கள் ------ வகையில் அடங்கும்
A). சார்பெழுத்து
B). சுட்டெழுத்து
C). முதல் எழுத்து
D). உயிர் எழுத்து
15. பாண்டியனுக்கு உரிய மாலை
A). பனம் பூ
B). வேப்பம் பூ
C). ஆத்திப் பூ
D). பருத்திப் பூ
16. 1) கார்மேகம் போல் கவிதை பொழியும் ஆற்றல் பெற்றதால் இவர் காளமேகப் புலவர் என்று அழைக்கப் படுகிறார்
2) வைணவ சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாறினார்
A). 1 சரி
B). 2 சரி
C). 1 சரி 2 தவறு
D). 1,2 சரி
17. மெத்த – பொருள் தருக
A). குறைவாக
B). அதிகமாக
C). மிகுதியாக
D). நிறைவாக
18. ஆய்லராக இல்லாவிட்டாலும் இராமனுஜம் குறைந்தபட்சம் ஒரு ஜாகோபி என்று கூறியவர்?
A). லிட்டில்வுட்
B). இந்திராகாந்தி
C). லார்மெண்ட் லண்ட்
D). பேரா. ஈ. டி. பெல்
19. இராமானுஜன் சாதாரண மனிதரல்லர் அவர் இறைவன் தந்த பரிசு என்று கூறியவர்
A). சூலியன் கக்சுலி
B). லார்ட்மெண்ட் லண்ட்
C). பேரா. ஈ. டி. பெல்
D). இந்திராகாந்தி
20. ------சொற்கள் தனித்தியங்காமல் பெயரையோ வினையையோ சார்ந்து வரும் சொல்
A). பெயர்ச் சொல்
B). வினைச் சொல்
C). இடைச் சொல்
D). உரிச் சொல்
21. ஒரு பொருளுக்கு சிறப்பாய் வருவது
A). இடுகுறிப் பெயர்
B). இடுகுறிசிறப்புப் பெயர்
C). காரணப் பெயர்
D). காரண சிறப்புப் பெயர்
22. சைவம் முதலிய பல சமயங்களுக்கும் சென்று இறுதியில் வைணவத்திற்கு வந்தவர்
A). திருமழிசையாழ்வார்
B). திருஞானசம்பந்தர்
C). திருநாவுக்கரசர்
D). பெரியாழ்வார்
23. கல்லாடம் கற்றவனோடு மல்லாடாதே என்பது
A). முதுமொழி
B). பழமொழி
C). புதுமொழி
D). தனிமொழி
24. நில்லாமை யுள்ளும் நெறிப்படும் - எவ்வுயிர்க்கும் - இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
A). இரட்டுற மொழிதல்
B). திரிகடுகம்
C). திருக்குறள்
D). முதுமொழிக்காஞ்சி
25. நிறை ஒழுக்கம் தேற்றாதான் பெற்ற வனப்பு - இப்பாடல் இடம் பெறுவது
A). திருக்குறள்
B). திரிகடுகம்
C). பழமொழி
D). ஏலாதி
Saharaonlinetest.blogspot.com
No comments:
Post a Comment