Monday, 15 January 2018

TNPSC CCSE TEST -32. 7th STD TAMIL TEST -5


TNPSC CCSE TEST -32
7th STD TAMIL TEST - 5

1. காரணம் அறியவியலாப் பெயர்கள் _____
A). காரணப்பெயர்
B). இடுகுறிப்பெயர்
C). பொருட்பெயர்
D). தொழிற்பெயர்

2. குழந்தை இலக்கியம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
A). அழ.வள்ளியப்பா
B). வாணிதாசன்
C). கவிமணி
D). பாரதிதாசன்

3. அகர முதலி வரிசையில் அமைத்து எழுதப்பட்ட தொடர் எது?
A). கார்த்திகை, கண்ணன், கர்ணன், கண்
B). கண், கார்த்திகை, கண்ணன், கர்ணன்
C). கண், கண்ணன், கர்ணன், கார்த்திகை
D). கண், கர்ணன், கண்ணன், கார்த்திகை

4. அம்மானை என்பது ______ விளையாடும் விளையாட்டு.
A). ஆண்கள்
B). பெண்கள்
C). குழந்தைகள்
D). சிறுமிகள்

5. பூக்களில் சிறந்த பூ பருத்திப் பூ எனக் கூறியவர்?
A). காந்தி
B). பட்டுக்கோட்டையார்
C). திரு.வி.க
D). கபிலர்

6. காராளர் எனப்படுபவர் யார்?
A). அரசர்கள்
B). போர் வீரர்கள்
C). வணிகர்கள்
D). உழவர்கள்

7. பஞ்சகவ்வியத்தில் பொருந்தாதது எது?
A). கோமயம்
B). சாணம்
C). தயிர்
D). வெண்ணை

8. பிற மொழிச்சொல் தமிழ்ச்சொல் பொருத்துக.
a.ஐதீகம் 1.இசைவு
b.குபேரன் 2.உலக வழக்கு
c.ஈசன் 3.பெருஞ்செல்வன்
d.அனுமதி 4.இறைவன்
a). 1 3 4 2
b). 2 4 3 1
c). 2 3 4 1
d). 1 4 3 2

9. பின்வருவனவற்றில் பொருந்தாதது எது?
A). பூப் பறித்தல்
B). கழங்கு
C). பந்தாடுதல்
D). ஓரையாடுதல்

10. விளையாட்டின் அடிப்படை நோக்கம்
A). வெற்றி
B). போட்டி
C). பரிசு
D). ஏதுமில்லை


11. ஏறாத மேடுகள் ஏறி வந்தேன் - பல
ஏரி குளங்கள் நிரம்பி வந்தேன் எனப் பாடியவர்?
A). பாரதிதாசன்
B). வாணிதாசன்
C). கவிமணி
D). பாரதியார்

12. ஒரு பொருளின் தன்மையை உள்ளவாறு கூறுவது?
A). இயல்பு நவிற்சியணி
B). உயர்வு நவிற்சியணி
C). வஞ்சப்புகழ்ச்சியணி
D). உவமையணி

13. ஓவியக் கருவூலம் என அழைக்கப்படுவது?

A). அஜந்தா சிற்ப ஓவியங்கள்
B). சித்தன்ன வாசல் குகை ஓவியங்கள்
C). பனைமலை குகை ஓவியங்கள்
D). திருவாரூர் குகை ஓவியங்கள்

14. பேனா மன்னருக்கு மன்னன் என சிறப்பிக்கப்பட்டவர்?
A). அண்ணா
B). திரு.வி.க
C). கண்ணதாசன்
D). ஜெயகாந்தன்

15. புரை – என்பதன் பொருள்?
A). நன்மை
B). நற்செயல்
C). தீய செயல்
D). குற்றம்

16. அம்மை, அப்பன் எனும் சொல் வழங்கும் நாடு?
A). நாஞ்சில் நாடு
B). வருசநாடு
C). கொங்குநாடு
D). வடநாடு

17. திரிகடுகம் பாடல்களில் எத்தனை வகையான மருந்துப் பெயர்கள் உள்ளன?
A). 3
B). 4
C). 5
D). 6

18. வாழைமரம் – எவ்வகைப் பெயர்?
A). இடுகுறிச் சிறப்புப் பெயர்
B). இடுகுறிப் பொதுப்பெயர்
C). காரணப்பொதுப்பெயர்
D). காரணச்சிறப்புப்பெயர்

19. குமரகுருபரர் எழுதிய நூல்களில் தவறானது எது?
A). நீதிநெறி விளக்கம்
B). கந்தர் கலிவெண்பா
C). சரசுவதி அந்தாதி
D). மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

20. குமரகுருபரர் வாழ்ந்த காலம்?
A). கி.பி.14ம் நூற்றாண்டு
B). கி.பி.12ம் நூற்றாண்டு
C). கி.பி.18ம் நூற்றாண்டு
D). கி.பி.16ம் நூற்றாண்டு

21. தமிழகத்தின் “வேர்ட்ஸ்வொர்த்“ என்று அழைக்கப்படுபவர் யார்?
A). அண்ணா
B). சுரதா
C). பாரதிதாசன்
D). வாணிதாசன்

22. பெயரை வேறுபடுத்திக் காட்டும் உருபு?
A). சொல்
B). எழுத்து
C). யாப்பு
D). வேற்றுமை

23. எந்த வேற்றுமைக்கு உருபுகள் இல்லை?
A). 4, 6
B). 1, 8
C). 1, 7
D). 1, 5

24. பொருள்களை இனம் பிரித்தறிய உதவும் அடைமொழிகள்?
A). இனமுள்ள அடைமொழி
B). இனமில்லா அடைமொழி
C). வேற்றுமை அடைமொழி
D). இவற்றில் எதுவுமில்லை

25. வண்ணங்கலவாமல் கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவதனை --------------- எ ன்று அழைத்தனர்.
A). கோட்டு ஓவியம்
B). புனை ஓவியம்
C). புனையா ஓவியம்
D). சித்திர ஓவியம்
Saharaonlinetest.blogspot.com

No comments:

Post a Comment