Wednesday, 20 December 2017

TNPSC CCSE TEST - 12 MATHS TEST -1


TNPSC CCSE TEST - 12
MATHS TEST - 1

1.ஒருவன் ஒரு பொருளை 3% இலாபம் வைத்து விலை சொல்கிறான் பின்பு 3% தள்ளுபடி அளிக்கிறான் எனில் அவன் அப்பொருளை விற்பது?
அ ) 0.09% இலாபத்திற்கு
ஆ) 0.09% இழப்பிற்கு
இ) 9% இலாபத்திற்கு
ஈ ) இலாபமும் இல்லை அல்லது இழப்பும் இல்லை

2.  A ஒரு வேலையை 10 நாட்களிலும்  B ஒரு வேலையை 15 நாட்களிலும் முடிப்பர் எனில் அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும் ?
அ) 5
ஆ) 6
இ) 12
ஈ)  25

3. 12 பேர் ஒரு வேலையை 6 நாட்களில் செய்து முடிப்பர் அவர்கள் 2 நாட்கள் வேலை செய்தனர். அதன்பின் மேலும் 4 பேர் வேலையில் சேர்ந்தனர் எனில் மிதமுள்ள வேலையை முடிக்க ஆகும் காலத்தை கணக்கிடுக?
அ) 24
ஆ) 18
இ) 6
ஈ) 3

4. 50 ஆட்கள் ஒரு வேலையை 40 நாட்களில் செய்து முடிப்பர். அவர்கள் 10 நாட்கள் வேலை செய்தனர் அதன் பிறகு 20 பேர் வேலையை விட்டு விலகி சென்றனர் எனில் மீதமுள்ள வேலையை முடிக்க எவ்வளவு காலம் ஆகும்?
அ) 50
ஆ) 40
இ) 30
ஈ) 20

5. 40 பேர் ஒரு வேலையை 30 நாட்களில் செய்து முடிப்பர் அந்த வேலையில் பாதி வேலையை 25 பேர் முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
அ) 6
ஆ) 12
இ) 24
ஈ) 25

6. குழாய்  A ஆனது தொட்டியை 40 மணி நேரத்தில் நிரப்பும் குழாய் B ஆனது அதே தொட்டியை 60 மணி நேரத்தில் நிரப்பும் இரண்டு குழாய்களும்   ஒரே நேரத்தில் திறந்து விடப்பட்டால் தொட்டியை நிரப்ப ஆகும் நேரத்தை கணக்கிடுக?
அ) 10 மணிநேரம்
ஆ)  15மணிநேரம்
இ) 20 மணிநேரம்
ஈ)  24 மணிநேரம்

7. இரண்டு எண்களின் கூடுதல் 25 மற்றும் அவைகளின் வித்தியாசம் 13 எனில் அந்த இரண்டு எண்களின் பெருக்குத்தொகை என்ன?
அ) 96
ஆ) 156
இ) 19
ஈ) 114

8. 2163 × 2175 ன் பெருக்குத்தொகைக்கு எந்த சிறிய எண்ணை சேர்த்தால் அது முழுவர்க்கமாக மாறும்?
அ) 49
ஆ) 64
இ) 25
ஈ) 36

9. ரூ 4500 ஆனது A, B, C ஆல் முறையே 1: 3 : 5 என்ற விகிதத்தில் முதலீடு செய்யப்படுகிறது எனில் B ன் பங்கு என்ன?
அ) 500
ஆ) 1500
இ) 2500
ஈ)  2000

10. தனிவட்டி விகிதத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையானது 4 வருடங்களில் 700 ஆகவும் 7 வருடங்களில் 850 ஆகவும் மாறுகிறது எனில் அசல் என்ன?
அ) 700
ஆ) 200
இ) 500
ஈ) 350

Saharaonlinetest.blogspot.com

No comments:

Post a Comment