Wednesday, 27 December 2017

TNPSC CCSE TEST -18 PHYSICS TEST -2


TNPSC CCSE TEST - 18
PHYSICS - 2

1. ஒளி இழை குழாயில் ஒளிக்கற்றையானது எதன் அடிப்படையில் பயணிக்கிறது?
அ) ஒளிவிலகல்
ஆ) முழுஅக எதிரொளிப்பு
இ) எதிரொளிப்பு
ஈ)  முனைவாக்கம்

2. ஒரலகு திறன் காரணி கொண்ட மின்சுற்று எது?
அ) தூய மின் நிலையம்
ஆ) தூயமின் தேக்கி
இ) தூயமின் தடை
ஈ)  மின் நிலையம் , மின் தேக்கி

3. ஓசோன் எந்த கதிர்வீச்சை உறிஞ்சும்?
அ) கதிர்கள்
ஆ) புற ஊதா கதிர்கள்
இ) கண்ணுறு ஒளி
ஈ)  அக சிவப்பு கதிர்கள்

4. மின்னோட்டத்தின் காந்த விளைவை கண்டு பிடித்தவர்?
அ) பாரடே
ஆ) ஒயர்ஸ்டெட்
இ) ஆம்பியர்
ஈ)  மோர்

5. ஒலிவாங்கியின் செயல்பாடு என்பது?
அ) ஒலி சைகையை, மின் சைகையாக மாற்றும்
ஆ) மின் சைகையை, ஒலி சைகையாக மாற்றும்
இ) மற்றும்
ஈ)  அல்லது

6. ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு ரேடியோ அலை செல்லும் போது அதன் எந்த பண்பு மாறாது?
அ) வேகம்
ஆ)  அலைநீளம்
இ) அதிர்வெண்
ஈ)  கூற இயலாது

7. ரூதர்போர்டு எதன் அலகு?
அ) ஆற்றல்
ஆ) கதிரியக்கம்
இ) ஒளிமின்னோட்டம்
ஈ)  காந்தபுலம்

8. எது கதிரியக்க தனிமம் அல்ல?
அ) கால்சியம்
ஆ) யுரேனியம்
இ) தோரியம்
ஈ)  ரேடியம்

9. இயற்கை கதிரியக்கத்தை கண்டறிந்தவர்?
அ) மேரிகியூரி எர்னஸ்ட்
ஆ) எர்னெஸ்ட் ரூதர்போர்டு
இ) ஹென்றி பெக்குரோல்
ஈ)  என்ரிக்கோ பெர்மி

10. ஒலி அலைகள் எதில் வேகமாக செல்லும்?
அ) நீர்
ஆ) காற்று
இ) எஃகு
ஈ)  மண்ணெண்ணெய்
Saharaonlinetest.blogspot.com

No comments:

Post a Comment